Tamil Sanjikai

அரசின் நிர்வாக சுணக்கத்தால் (procrastination) அந்நாட்டின் பொருளாதார நிலை சரிவு கண்டுள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன. இதனை முன்வைத்து திரளான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் பாக்தாத்தில் போராட்டத்தில் நேற்று நடந்த வன்முறையில் பாதுகாப்புப் படையினர் 11 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக்கில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 320-ஐ தாண்டி உள்ளது.

ஈராக் நாடாளுமன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர், அக்டோபர் 1 முதல் 319 பேர் இறந்துள்ளனர், 15,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என கூறி உள்ளார். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவார்கள். பாதுகாப்பு அதிகாரிகளும் வன்முறையில் இறந்துள்ளனர்.

0 Comments

Write A Comment