Tamil Sanjikai

இந்தியாவின் உள்கட்டமைப்பு உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 5.2 சதவீதம் சரிந்து உள்ளது. இது இந்த ஆண்டின் மிக மோசமான செயல்திறன் ஆகும். தொழில்துறை உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மிக விரைவான விகிதத்தில் குறைந்து உள்ளது.

கச்சா எண்ணை உற்பத்தியில் 5.4 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் 4.99 சதவீதமும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலக்கரி, இரும்பு, கச்சா எண்ணை உற்பத்தி, கியாஸ் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, சிமெண்டு, மின்துறை, உரத்துறை ஆகிய 8 துறைகள் நாட்டின் முன்னணி உற்பத்தி துறைகளாக உள்ளன. இதன் வளர்ச்சி தொடர்பான புள்ளி விவரம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. உரம் தவிர, மற்ற 7 துறைகளிலும் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதே நேரத்தில் எண்ணை சுத்திகரிப்பு துறையில் மைனஸ் 6.7 சதவீதமும், சிமெண்டு உற்பத்தியில் மைனஸ் 2.1 சதவீதமும், இரும்பு உற்பத்தியில் மைனஸ் 0.3 சதவீதமும், மின்துறையில் மைனஸ் 3.7 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

உரத்துறை மட்டும் வளர்ச்சி கண்டுள்ளது. அந்த துறையில் 5.4 சதவீதம் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது.

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் பொருளாதாரம் செப்டம்பரில் 7.2 சதவீமாக ஆக உயர்ந்தது என்று கூறி உள்ளது. இது பொருளாதாரத்தில் மந்த நிலையின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் அக்டோபரில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதமாக ஆக உயர்ந்து உள்ளது என கூறி உள்ளது. இது ஆகஸ்ட் 2016 முதல் இது தான் மிக உயர்ந்தது ஆகும்.

0 Comments

Write A Comment