இயற்கை விவசாயத்துக்கு முன்னோடியாகத் திகழும் சிக்கிமிற்கு ஐ.நா.சபை விருது அறிவித்து கவுரவப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலம் ரசாயனக் கலப்பு விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறி இந்தியாவிற்கே பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது . இம்மாநில மக்கள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிக்காமல் இயற்கை முறையிலேயே விவசாயம் செய்து வருகின்றனர். அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங்கின் முயற்சியால், பாரம்பரிய விவசாய முறையை அங்குள்ள விவசாயிகள் கடை பிடிக்கின்றனா்.
இம்மாநில மக்கள் தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகள் இயற்கை முறையிலேயே பயிரிடப்பட்டு உபயோகப் படுத்தப் படுகிறது. இதன் பயனாக சென்ற நிதியாண்டில் 80,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு இயற்கையான முறையில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வீட்டுத்தோட்டங்களில் காய்கறிகள் பயிாி்ட மாநிலம் முழுவதும் உள்ள 14 கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு விவசாயம் ஊக்கவிக்கப்படுகிறது..சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகள் அதிகளவில் வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பயனைடவதுடன் சுற்றுலாத் துறையும் மேம்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி மக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டதற்காகவும், சுற்றுலாப் பயணிகளை பெருமளவு ஈர்த்ததற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது,. இந்த விருதுக்கு 51 நாடுகள் போட்டியிட்ட நிலையில், சிறிய மாநிலமான சிக்கிம் சிறந்த விவசாய மாநிலமாக ஐக்கிய நாடுகள் சபையால் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
0 Comments