Tamil Sanjikai

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மூத்த வக்கீல் ராஜீவ் தவன் ஆஜராகி வாதாடி வருகிறார். இந்நிலையில், ராஜீவ் தவனுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்ததால் இது தொடர்பாக அவர் கோர்ட்டு அவமதிப்பு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மிரட்டல் விடுத்த தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி என்.சண்முகம் (வயது 88) மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சய் கலால் பஜ்ரங்கி ஆகியோர் இதுகுறித்து 2 வாரத்தில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அவர்கள் பதில் அளித்த பின்னர் இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

0 Comments

Write A Comment