தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் குமரிக்கடல் முதல் உள் கர்நாடகா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் அங்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அடுத்த நான்கு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட மலை சார்ந்த பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரத்தில் உறைபனி தொடரும் என்றும் உள் மாவட்டங்களில் மூடு பனி நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments