Tamil Sanjikai

ஐடி நிறுவனங்களின் அழகில் கவரப்பட்டு இளைஞர்களுக்கு அதன் கிளையாக உருவாக்கப்பட்டது தான் இந்த ஆன்லைன் விளையாட்டு. இன்று உலகளாவிய ஒரு விளையாட்டாக இது மாறியுள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டு துறையில் தற்போது முக்கிய இடத்தை பிடிப்பது அமெரிக்காவும் ஜப்பானும். தற்போது 160 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் 3% இடத்தை மட்டுமே கொண்டுள்ள இந்திய நாடு இன்று வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை இந்த ஆன்லைன் விளையாட்டு துறை ஆகும். ஆன்லைன் கேம்ஸ் என்பது இன்றைய ட்ரெண்ட். இதில் ராயல் கேம் ஆகக் கருதப்படும் Fortnite தற்போது PUBG இடம் தோல்வி அடைந்துள்ளது.

சென்சார் டவர் என்னும் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள நுண்ணறிவு தரவுகளின் அடிப்படையில் சர்வதேச அளவில் இத்தனைக் காலம் முதலிடத்தில் இருந்த Fortnite கேம் தற்போது இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. காரணம், முதலிடத்தை அதிரடியாகக் கைப்பற்றிய PUBG.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் Fortnite வருமானத்தை விட 43 சதவிகிதம் அதிக வருவாயை PUBG ஈட்டியுள்ளது. PUBG-க்கு அதிக வருவாய் தரும் டாப் இடங்களில் ஆசியா முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் சீனா உள்ளது. ஆனால், வெறும் 30 சதவிகித வருவாய் மட்டுமே அமெரிக்கா தருகிறதாம். கடந்த மார்ச் 2018-ஆம் ஆண்டு அறிமுகமான PUBG இதுவரையில் மூன்று சீசனை நிறைவு செய்து தற்போது நான்காவது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது. புதிய வாகனங்கள், அதிநவீன ஆயுதங்கள் என PUBG சீசன் 4 களைகட்டி வருகிறது.

0 Comments

Write A Comment