துபாயில் வசித்துவரும் 13 வயது இந்திய வம்சாவளி, சிறுவன் ஒருவன் புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல்,ட்ரை நெட் சொலுஷன்ஸ என்ற சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் திருவல்லா என்ற பகுதியில் பிறந்த ஆதித்யன் ராஜேஷ் என்ற சிறுவன், சிறுவயது முதலே மொபைல் போன் பயன்படுத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டியுள்ளார். அந்த சிறுவனுக்கு 5 வயது இருக்கும்போது அவனது தந்தைக்கு துபாயில் வேலை கிடைததால் அவர்கள் அங்கு குடிபெயர்ந்தனர். தற்போது துபாயில் வசித்து வரும் அந்த சிறுவன், சிறுவயதிலேயே கணினியை நன்கு கற்றறிந்து தனது 9ம் வயதில் புதிய மொபைல் செயலி ஒன்றை உருவாக்கினான். அதன் மூலம் பிரபலமடைந்த சிறுவனுக்கு பல வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினர். பின்னர், படிப்படியாக தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, லோகோ மற்றும் இணையதளப்பக்கங்களை உருவாக்கி சம்பாதிக்க தொடங்கினார்.
தற்போது ஆதித்யன் ராஜேசுக்கு 13 வயதாகும் நிலையில், ட்ரை நெட் சொலுஷன்ஸ ((Trinet solutions)) என்ற பெயரில் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தை துபாயில் நிறுவியுள்ளான். ஆதித்யனுடன் பள்ளியில் பயிலும் சக நண்பர்கள் மூன்று பேர் இங்கு பணிபுரிகின்றனர். தனது 18ஆவது வயதில் மிகப்பெரிய நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பதே லட்சியம் என்று அச்சிறுவன் கூறியுள்ளான். 13 வயதில் அபார திறமை கொண்டுள்ள இந்த சிறுவனின் செயல், பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
0 Comments