ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எந்த வித ஒப்பந்தமின்றி வெளியேறுவதற்கு இங்கிலாந்து எம்பிக்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மூன்று முறை எம்பிக்களின் போதிய ஆதரவின்றி இந்த முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரிக்ஸிட் ஒப்பந்தத்தை அமல்படுத்த மேலும் காலம் நீட்டிப்பு கோரப்படும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான ஜெரமி கோர்பின்னையும் அழைத்துள்ளார்.
ஆனால் இதற்கு எதிராக வேல்ஸ் பகுதிக்கான மந்திரி நைஜல் ஆடம்ஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். “ஜெரமி கார்பைனை பிரதமர் தெரசா மே சந்தித்து பேச இருப்பது மிகப்பெரிய தவறு” என அவர் கூறினார். பிரதமர் தெரசா மேவுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், நேற்று அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
0 Comments