Tamil Sanjikai

குஜராத் மாநிலத்தில் உள்ள தாக்கூர் சமூக மக்கள், தாங்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில் உள்ள திருமணமாகாத தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் செல்போன் உபயோகம் என்பது மனிதனுடன் ஒன்றிவிட்டது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் சில ஊர்களில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாக்கூர் சமூக மக்கள் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தியுள்ளனர். அதில், தங்கள் இன மக்கள் வாழும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், திருமணமாகாத பெண்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை விதிக்க முடிவெடுத்தனர்..

அதன்படி, செல்போன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு சுமார் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உடனடியாக இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர்.

0 Comments

Write A Comment