கடந்த ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை சென்னை ஐஐடியில் முதல்கட்டமாக 3 நாட்கள் நடைபெற்ற வளாக நேர்காணலில் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிக மாணவர்கள் வேலைக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
நடைபெற்ற நேர்காணலில் இன்டெல் டெக்னாலஜி, மைக்ரோ சாப்ட், மைக்ரான் டெக்னாலஜி, சிட்டி வங்கி, பிளிப்கார்ட், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்பட 133 நிறுவனங்கள் பங்கேற்று 680 மாணவர்களை வேலைக்காக தேர்வு செய்துள்ளன.
136 மாணவர்களுக்கு படிப்பு முடிவதற்கு முன்பாகவே வேலை கிடைத்துள்ளது. ஸ்டார்ட்டப் எனப்படும் புதிதாக தொடங்கப்பட்ட 20 நிறுவனங்கள் 78 மாணவர்களை பணிக்கு தேர்ந்தெடுத்துள்ளது. வேலைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் 90 பேர் டேட்டா சயின்ஸ், டேட்டா அனலிடிக்ஸ் துறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
0 Comments