மார்ச் 29 ல் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் 12வது சீஸனில் மகேந்திரசிங் தோனி தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணி குறித்த முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது. அணியிலிருந்து மூன்று வீரர்களை விடுவிப்பதாகவும், 22 வீரர்களை அணியில் தொடர இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இதன்படி சென்ற தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் மற்றும் இந்தியா உள்ளூர் வீரர்கள் கேஷிட்ஸ் ஷர்மா மற்ரும் செத் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். போன சீஸனில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த கேதர் ஜாதவுக்கு பதிலாக இடம்பெற்ற டேவிட் வில்லே உள்ளிட்ட 22 வீரர்கள் அணியில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா ஐபிஎல் அணிகளும் நவம்பர் 15ம் தேதிக்குள் அணி விவரத்தை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஐபிஎல் 12 மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடக்கி மே மதம் 19 ஆம் தேதி முடிவடைகிறது. ஐபிஎல் 12 முடிந்து சில நாட்களிலேயே ஐ.சி.சி உலக கோப்பை தொடங்க உள்ளதால் இந்திய கேப்டன் கோலி, காயமடைவதை தவிர்க்க இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை ஐபிஎல் போட்டிகளை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments