ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராக தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களின் கோரிக்கையை, ஆறுமுகசாமி ஆணையம் நிராகரித்தது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரைக்கும் சுமார் 150க்கும் மேற்பட்டோரின் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. ஏற்கனவே ஆஜரான அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 7 பேர், குறுக்கு விசாரணைக்காக மீண்டும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர்கள் ஆணையத்தில் ஆஜராகவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அப்போலோ நிர்வாகம் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தது.
எனினும் இம்மனுவை ஆறுமுகசாமி ஆணையம் நிராகரித்தது. மருத்துவர்களை உடனடியாக ஆஜர்படுத்த சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் எந்த சிரமமும் இல்லை என ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
0 Comments