ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜெய்ப்பூர் மாவட்டம் சக்சு ((Chaksu)) நகரில் 25 பயணிகளுடன் ராஜஸ்தான் மாநில அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஷீத்லா அணை ((Sheetla)) அருகே உள்ள பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கால்வாயில் விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், விரைந்து செயல்பட்டு பேருந்தையும் அதில் இருந்த பயணிகளையும் மீட்டனர். இதில் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
0 Comments