Tamil Sanjikai

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் 6 நாட்கள் உயர்வுக்குப் பிறகு இன்று சரிவுடன் முடிந்தது. நாளை ஆர்பிஐ நாணய கொள்கைக் கூட்டம் நடைபெற இருப்பது மற்றும் 2019 பொதுத் தேர்தல் முன்பு நடைபெற்றுள்ள மூன்று மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக வரும் செய்திகள் போன்ற காரணங்களினால் முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பங்குகளை விற்றுள்ளனர்.

சர்வதேச சந்தையில் அமெரிக்காவுடன் சேர்த்து ஐரோப்பா மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளும் சரிந்தே வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 106.69 புள்ளிகள் என 0.29 சதவீதம் சரிந்து 36,134.31 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டியும் 14.25 புள்ளிகள் என 0.13 சதவீதம் சரிந்து 10,869.50 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

ஐடி, டெக், எண்ணெய் மற்றும் எரிவாயு, கட்டுமானம், மெட்டல் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் லாபத்தினை அளித்த நிலையில் வங்கி, நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகள் நஷ்டம் அளித்துள்ளன. ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ், விப்ரோ, வேதாந்தா, டிசிஎஸ், கோல் இந்தியா பங்குகள் லாபம் அடைந்துள்ள நிலையில், சன் பார்மா, மஹிந்தரா & மஹிந்தரா, எச்டிஎப்சி, எஸ்பிஐ, எண்டிபிசி, இண்டச் இண்ட் வங்கி பங்குகள் நஷ்டத்தினை அளித்துள்ளன.

0 Comments

Write A Comment