Tamil Sanjikai

சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷிற்கு’ வழங்கப்பட்டுள்ளது.

2018 - 66 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன அதன் விவரம் வருமாறு:

* சிறந்த தமிழ் படம் பிரியா கிருஷ்ண மூர்த்தி இயக்கிய பாரம்

* சிறந்த தெலுங்கு படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி தேர்வு

* சர்ஜிக்கல் தாக்குதலை மையமாக வைத்து எடுத்த உரி படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைப்பிற்கான விருது

* பத்மாவத் திரைப்படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது.

* சிறந்த இந்தி படமாக ஸ்ரீராம் ராகவன் இயக்கிய அந்தாதூன் தேர்ந்து எடுக்கப்பட்டது.

* சிறந்த துணை நடிகைக்கான விருது 'பாதாய் ஹோ' படத்தில் நடித்த சுரேகா சிக்ரி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

* சிறந்த பின்னணி பாடகர்- அரிஜித் சிங் -பத்மாவத் படம்

* சிறந்த பின்னணி பாடகி -பிந்து மாலினி ( கன்னட படம் நிதிசராமி)

* சிறந்த ஒலி கலவை: தெலுங்கு படம் ரங்கஸ்தலம்

* சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்-க்கான தேசிய விருது ’கே.ஜி.எஃப்’ திரைப்படத்திற்கு அறிவிப்பு
* சிறந்த நடிகர்களுக்கான விருது ஆயுஷ்மான் குரானா (அந்தாதூன்) விக்கி கவுசல் ( உரி)

* சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷிற்கு’ வழங்கப்பட்டுள்ளது

* சிறந்த நடனத்திற்கான விருது பத்மாவத் படத்தில் வரும் கூமர் பாடலுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

* தேசிய விருது சிறப்பு ஜூரி விருது ஜோஜு ஜார்ஜ் (ஜோசப்) மற்றும் சாவித்ரி சசிதரன் (சூடானி பிரம் நைஜிரியா) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது

* சிறந்த திரைப்படத்திற்கான விருது ஹெலாரோவுக்கு (குஜராத்தி) செல்கிறது

* தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஒண்டல்லா எரடல்லா (கன்னடம்)

* சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது 'ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆப் இந்தியா' என்ற படத்திற்கு அறிவிப்பு

* திரைப்படம் எடுக்க உகந்த மாநிலம் உத்தராகண்ட் மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

* சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஏடபிள்யூஇ (தெலுங்கு) க்கான ஸ்ருஷ்டி கிரியேட்டிவ் ஸ்டுடியோ மற்றும் கேஜிஎஃப் (கன்னடம்) க்கான யுனிஃபை மீடியா

0 Comments

Write A Comment