Tamil Sanjikai

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித்தோழியான பதர் சையத் வழக்கறிஞர், SITE மகளிர் கல்லூரியின் நிரந்தர உறுப்பினர், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ , வக்பு வாரிய தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அவருக்கு நெருக்கமானவர்கள் பலர் அதிமுகவில் இருந்து மாற்றுக்கட்சியில் இணைந்து வரும் நிலையில்ஜெயலலிதாவின் பள்ளித்தோழியும், சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏவாக இருந்தவருமான பதர் சையத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில், காங்கிரசில் இன்று சேர்ந்து உள்ளார்.

0 Comments

Write A Comment