Tamil Sanjikai

நாட்டிலுள்ள அனைத்து கணிணி தகவல்களையும் ஐபி எனப்படும் மத்திய உளவு துறை, போதை பொருள் கட்டுப்பாட்டு ஆணையம், அமலாக்கத்துறை இயக்குனரகம், சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை, வருவாய் நுண்ணரிவு பிரிவு உட்பட பத்து மத்திய அமைப்புகள் இடைமறித்து பார்க்கவும் பகுப்பாய்வு செய்யவும் மத்திய உள்துறை அண்மையில் உத்தரவு வழங்கி இருந்தது. இது தொடர்பான கெசட் அறிவிப்பு கடந்த வெள்ளி அன்று வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் மத்திய அரசின் உத்தரவு சட்டவிரோதமானது, அரசியல் அமைப்புக்கு எதிரானது எனக்குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த உத்தரவை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய எதிர்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்திருந்த்து குறிப்பிட்த்தக்கது.

ஆனால் பாரதிய ஜனதா கட்சி, இந்த உத்தரவு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்திலேயே கொண்டு வரப்பட்டது என்றும் எந்தெந்த அமைப்புகள் கண்காணிக்கலாம் என்ற வரையரை மட்டும்தான் தற்போது கொண்டுவரப்பட்டது எனவும் கூறியுள்ளனர்.

0 Comments

Write A Comment