Tamil Sanjikai

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் நேற்று காரசார விவாதம் நடந்தது அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை நோக்கி காகிதத்தில் செய்த ராக்கெட்டுகளை வீசி எறிந்தனர்.

மக்களவையில் ரஃபேல் போர் விமானம் குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘‘விமானத்தின் விலை அதிகரிக்க என்ன காரணம்? அம்பானி நிறுவனத்தை ஒப்பந்தத்தில் சேர்த்தது ஏன்? விமானத்தின் எண்ணிக்கையை குறைத்தது யார்?’ என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். மேலும், ரபேல் குறித்து நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல தைரியமில்லாமல் பிரதமர் மோடி அறையில் ஒளிந்து கொள்வதாகவும் ராகுல் கடுமணியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட், போஃபர்ஸ், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி காங்கிரசை விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பிக்கள் சிலர் காகித ராக்கெட்டுகளை அருண் ஜேட்லியை நோக்கி வீசினர். குழந்தைத் தனமாக நடந்து கொள்வதை நிறுத்துமாறு சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் காங்கிரஸ் உறுப்பினர்களை எச்சரித்தார்.

ஆண் எம்.பி.க்கள் காகிதத்தில் விமானம் செய்து கொடுக்க அதனை சுஷ்மிதா தேப் எனும் காங்கிரஸ் பெண் எம்.பி. வீசி எறிந்தார். இதைக் கண்ட சோனியா காந்தி அவரைப் பாராட்டுவது போல் தட்டிக் கொடுத்தார்.

0 Comments

Write A Comment