Tamil Sanjikai

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களின் படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகிவிட்ட நிலையில் நேற்று காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம், தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ட்டி புயல் காரணமாக இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 7 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில், நேற்று காலை 700க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, 4 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளனர். இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரவோடு இரவாக கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையினர் தாக்குதலால் படகு ஒன்றிற்கு 50ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு நேரிட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். இரு நாட்டு மீனவர்களும் சமூகமாக மீன்பிடிக்க இந்திய - இலங்கை மீனவர்களிடயே 5ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

0 Comments

Write A Comment