Tamil Sanjikai

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் நீடிப்பதால் அவற்றைத் தடுப்பதற்காக எல்லைச் சுவர் எழுப்ப வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வந்த நிலையில, எல்லைச் சுவரை எழுப்ப தேவைப்படும் நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

டிரம்ப்பின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சியினர், இந்த செயல் சட்டத்திற்கு முரணானது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment