பாகிஸ்தான் ராணுவம் நாட்டின் பாதுகாப்புக்காக அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி சோதித்து வருகிறது.இந்நிலையில், 1,500 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்கும் வல்லமை கொண்ட ‘சாகின் 2’ ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது..
இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அணுஆயுதங்களை ஏந்தி 1,500 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ‘சாகின் 2’ ஏவுகணை அரபிக்கடல் பகுதியில் இருந்து ஏவி சோதிக்கப்பட்டது. இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் ‘சாகின் 2’ ஏவுகணையிடம் உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments