Tamil Sanjikai

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக குறைந்த கட்டணத்தில் பால் விநியோகம் செய்யப்படுகிறது. சில்லறை விலையை விட குறைந்த விலையில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் , ஆவின் மாதாந்திர பால் அட்டை விநியோகத்தில் இம்மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி மாதம் தோறும் 16-ஆம் தேதிக்கு பிறகு மாதாந்திர பால் அட்டை வாங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாதம்தோறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாதந்திர பால் அட்டைகளை வாங்குகின்றனர். பால் அட்டைதாரர்கள் பிரதி மாதம் 16-ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 17-ஆம் தேதி வரை பால் வாங்குகின்றனர்.

மாதாந்திர அட்டைகள் 30 நாட்கள், 25 நாட்கள், 20 நாட்கள் என மூன்று விதமாகவே வழங்கப்படுகின்றன. பெரும்பாலானோர் 30 நாட்கள் அட்டையையே வாங்குகின்றனர். 1-ஆம் தேதியில் இருந்து 14- ஆம் தேதிக்குள் வாங்கி விட வேண்டும். 14-ஆம் தேதி கெடுவை தவறிவிடுவோர் 17-ஆம் தேதி அன்று அல்லது 25-ஆம் தேதி அட்டைகளை வாங்க முடியும். 20 நாட்கள் மற்றும் 25 நாட்கள் அட்டையை வைத்து டெலிவரி செய்வோர் குளறுபடி செய்வதாக தகவல் வந்துள்ளது. அதனால் இனிமேல் 17-ஆம் மற்றும் 25-ஆம் தேதி வழங்கப்படும் அட்டையை ரத்து செய்யும் படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதனால் மாதாந்திர பால் அட்டை வாங்குவோர் 14-ஆம் தேதிக்குள் கார்டு வாங்குவது கட்டாயம் ஆகியுள்ளது. அதன்படி இந்த மாதம் பால் கார்டு வாங்காதவர்களுக்கு இன்றே கடைசி வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment