Tamil Sanjikai

ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் பேசிய அவர், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது;-

சில அம்சங்களில் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்தியா-அமெரிக்கா இடையே தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்புகிறோம். பாதகமான சூழ்நிலைகளில் கூட இந்திய பொருளாதாரத்தின் ஆற்றலை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட தொழிற்துறையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அப்படி ஏதேனும் இருந்தால் தெரிவிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

"டாக்டர் மன்மோகன் சிங் மீது பழிபோடும் விளையாட்டை செய்ய வேண்டாம் என்று சொன்னதை நான் மதிக்கிறேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எப்போது, தவறு நடந்தது என்பதை நினைவுகூருவது முற்றிலும் அவசியமாகும் என கூறினார்.

0 Comments

Write A Comment