Tamil Sanjikai

நோயாளிகளிடம் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து ,தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கடலூர், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் சுமார் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கடலூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவு, ஸ்கேன் பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த இடங்களில் நோயாளிகளிடமும் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களிடமும் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பிரிவுகளில் டிஜிட்டல் முறை உள்ள போதிலும் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே வாங்குவதற்கு இரண்டு நாள் கழித்து ஊழியர்கள் வர சொல்கின்றனர். அவ்வாறு வரும் நிலையில் அவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் நிலை இருந்து வந்துள்ளது. இதன் அடைப்படையில் தற்போது 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வரும் மருத்துவமனையில் நோயாளிகள் வழக்கம் போல் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, திருச்சி அரசு பொது மருத்துவமனை, திண்டுக்கல் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment