கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு உண்மை என்றால், அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார்.
ஒரு மர்மக்கதையின் தொடர்ச்சியாகவே கோடநாடு குறித்த வீடியோ வெளியாகி உள்ளதாகவும், இந்தியாவில் மற்ற முதல்வர்கள் மீது இதுபோன்ற கொலை குற்றசாட்டு இல்லை என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
0 Comments