Tamil Sanjikai

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதுவரை பீகில் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முழுக்க படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் இசை வெளியீடு வரும் 19ந் தேதி நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

0 Comments

Write A Comment