சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) இன்று அறிவித்த 2018 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் கனவு அணியில் கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருது இந்திய அணியின் தற்போதய விக்கெட் கீப்பர் ரிஷப்பந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாவருடம் ICC நிறுவனம், உலகளவிலான கிரிக்கெட் வீரர்களில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அந்த வருடத்திற்கான கனவு அணி மற்றும் சிறந்த வீரர்களுக்கான விருதுகளையும் அறிவிக்கும்.
அந்த வகையில் 2018-ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் அணி, டெஸ்ட் அணி வீரர்கள், கேப்டன் மற்றும் வளர்ந்து வரும் வீரர் உள்ளிட்ட விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் சிறந்த ஒரு நாள் அணி, டெஸ்ட் அணி என இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அந்த இரு அணிகளுக்கும் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஐசிசியின் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இதனால் ஹேட்ரிக் ஹீரோ என்ற படத்தையும் கோலிக்கு ICC வழங்கியுள்ளது.
0 Comments