மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் ஜகதால்பூருக்கு செல்லும் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில், கெவுட்குடா என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரயில் என்ஜின் தடம் புரண்டு கவிழ்ந்தது.
இதனால் அந்த ரயில் உள்ள சரக்கு பெட்டி மற்றும் இரண்டாம் வகுப்பு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ரயில்வே ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கின. விபத்து குறித்த விரிவான விசாரணைக்கு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
0 Comments