பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர். இவர் ஹிந்தி அல்லது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நேற்று முன்தினம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அகில இந்திய காங்கிரஸ் ஊடக பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் நிருபம், மிலின்டா தேரா ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்தது பற்றி நடிகை ஊர்மிளா நிருபர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் பிடித்ததால் என்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டேன். எனக்கு அன்பான வரவேற்பு கொடுத்த தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் தேர்தலுக்காக கட்சியில் இணையவில்லை. தேர்தல் முடிந்த பின்னரும் கட்சியில் இருந்து விலகமாட்டேன்’ என்றார்.
இந்த நிலையில், அக்கட்சியின் பொது செயலாளர் (பொறுப்பு) முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள செய்தியில், நடிகை ஊர்மிளா மடோங்கர் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலுக்கு போட்டியிடுகிறார். இதற்கு கட்சியின் மத்திய தேர்வு குழு ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments