Tamil Sanjikai

அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில், மேரிலேண்ட் புறநகர் பகுதியில் நடந்த கூட்டமொன்றில் அதிபர் டிரம்ப் பேசினார். அவர் கூறும்பொழுது, இந்தியா அதிக வரி விதிக்கும் நாடாக உள்ளது. நாம் ஒரு மோட்டார் சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்பும்பொழுது அதற்கு 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

இதே இந்தியாவில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் இறக்குமதி செய்யப்படும்பொழுது நாம் வரி எதுவும் விதிப்பதில்லை. இதனால் நாமும் இனி வரிகளை விதிக்க வேண்டும். அதற்காக, இந்தியாவை போல் 100 சதவீத வரிகளை நான் விதிக்கப்போவதில்லை. 25 சதவீத வரியே விதிக்க போகிறேன். இதற்கு செனட் சபையின் ஆதரவும் வேண்டும் என கூறியுள்ளார்.

நாம் முட்டாள்கள் என அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் நம்மை மதிப்பதில்லை. ஆனால் உங்களுக்கு ஒன்றை கூறி கொள்கிறேன். நமது நாட்டை உலக நாடுகள் மீண்டும் மதிக்கிறது. இதற்கு முன் இல்லாத வகையில் அமெரிக்கா வேகமுடன் பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment