ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி டிபிஐ வளாகத்தில் திங்கட்கிழமை தொடங்கி 4வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 4வது நாளாக நீடிக்கும் நிலையில், அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஆசிரியர்களில் இதுவரை 125-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் நேற்று நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடை நிலை ஆசிரியர்களிடம் திருவல்லிக்கேணி துணை ஆணையர் செல்வ நாகரத்தினம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தங்களை முதலமைச்சர் அழைத்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திய அவர்கள் கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர்.
0 Comments