Tamil Sanjikai

நாகர்கோவிலில் நடந்த இன்போசிஸ் நிறுவன வேலைவாய்ப்பு வளாக தேர்வில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர் முதலிடம் பெற்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு மாநில அளவிலான வேலைவாய்ப்பு திட்டத்தின்படி நாகர்கோவில் மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே இன்போசிஸ் நிறுவன வளாக வேலைவாய்ப்பு தேர்வு மற்றும நேர்காணல் நாகர்கோவில் செயின்ட் சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் 2 நாட்கள் நடந்தது. இந்த வளாக தேர்வில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இருந்து பல்வேறு துறையை சேர்ந்த 30 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியரை நேஷனல் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் அருணாசலம், கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சண்முகவேல் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர். மேலும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து வளாக தேர்விற்கு வருகை தர இசைவு தெரிவித்துள்ளதாக கல்லூரியின் வேலைவாய்ப்பு, பயிற்சி மற்றும் கலந்தாய்வு துறை தலைவர் சீனிவாசகன் தெரிவித்துள்ளார்

0 Comments

Write A Comment