பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று கடும் வெள்ளப் பெருக்குடன் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது. முக்கியமாக, நிலச்சரிவின் காரணமாக பிகால் பகுதி மற்றும் கிழக்கு விசாயஸ் ஆகிய பகுதிகளில் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக அடிக்கறியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மிண்டோனா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு, ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
0 Comments