சென்னையில் நள்ளிரவில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட 15 இளைஞர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நள்ளிரவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுட்டனர். அதில் 15 பேர் மட்டும் போக்குவரத்து போலீசிடம் சிக்கிய நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று அதிகாலை சூளை பட்டாளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் என்ற கல்லூரி மாணவர், இருசக்கர வாகனத்தில் சென்ற போது காமராஜர் சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
பேருந்து மோதி கீழே விழுந்து உயிரிழந்ததாக உடன் சென்ற நண்பர்கள் கூறியுள்ளனர். ஆனால் பந்தயத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments