போதைமருந்து எடுத்து கொண்டது சோதனையில் தெரியவந்ததை அடுத்து, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அந்த அணியின் பேட்ஸ்மேனான அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ். இவர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் போதைமருந்து உட்கொண்டதாக அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து, இதுதொடர்பாக அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அலெக்ஸ் ஹேல்ஸ் போதைமருந்து எடுத்துக் கொண்டது உறுதியானதையடுத்து அவர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, அதிரடியாக ஆடக் கூடிய அலெக்ஸ் ஹேல்ஸ், உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
0 Comments