மதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா அமர்வு தள்ளுபடி செய்தது.
தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டதால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர், ‘அதிகளவில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதால் மதுரை தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என்றார். இதையடுத்து, வேண்டுமெனில் கீழமை நீதிமன்றத்தில் தேர்தல் வழக்காக தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
0 Comments