Tamil Sanjikai

தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி, டி20 தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்ததை தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

வதோதராவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பெண்கள் அணியின் கேப்டன் லூஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45.1 ஓவர்களில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 41.1 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்ட பிரியா புனியா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

0 Comments

Write A Comment