தனது சிறுவது விடுமுறை நாளில் தான் சந்தித்த பெண் தோழி ஒருவரை ட்விட்டர் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்டுபிடித்துள்ளார் ப்ரீ எனும் பெண்மணி.
அதாவது, ப்ரீ 2006ம் ஆண்டு தனது விடுமுறை நாட்களை கொண்டாட ஹவாய் தீவிற்கு கப்பலில் பயணித்துள்ளார். அப்போது அதே கப்பலில் பயணித்த சகபயணியான ஹெய்யை, ப்ரீ சந்தித்துள்ளார், இருவரும் ஒரே நாளில் நல்ல நண்பர்களாகினர், இருவரும் இணைந்து புகைப்படமமும் எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து கடந்த 24ம் தேதி ப்ரீ, தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெய் உடன் எடுத்த அந்த புகைப்படத்தை பதிவிட்டு, ஹெய்யை அவரது சிறந்த தோழியாக நினைப்பதாகவும், அந்த பெண்னை காண அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது எனவும் கேட்டுக்கொண்டார். அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை காண மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். இந்த டுவிட்டை அவர் பார்த்தால் ரீடுவிட் செய்து மீண்டும் அவரைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ப்ரீ அனுப்பிய இந்த டீவீட்டை பலரும் ரீட்வீட் செய்ய, அந்த டுவீட் வைரலானது. இதையடுத்து 25ம் தேதியன்று பிரீயுடன் அப்புகைப்படத்தில் உள்ள ஹெய் அந்த ட்வீட்டை, ரீட்வீட் செய்து அவரது தற்போதைய படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து 12 ஆண்டுகள் கழித்து ட்விட்டர் மூலம் இணைந்த தோழிகள் இருவரும் ட்ரெண்டாகி வருகின்றனர். இதைப்பார்த்த பலரும் அவர்களை மகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
0 Comments