கொரிய எல்லையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரிய அரசு, தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் , அணு ஆயுத தயாரிப்பையும், சோதனைகளையும் வடகொரிய நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் . ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகவே கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த இரு தினங்கள் ஜப்பானில் தங்கி இருந்தார். அப்போது வட கொரிய அதிபரை சந்தித்து பேச தான் தயார் என்று கூறியிருந்தார்.
அவர் கூறிய மறுநாளே, ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசிவருகிறார். கொரிய எல்லையில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது.
0 Comments