கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்பர்ன் நகரில் இன்று தொடங்கியுள்ளன.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 37 வயதான நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் இப்போட்டியில் களமிறங்குகிறார்.
ஆறு முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் பெடரருக்கு கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
தனது கடைசி தொடரில் விளையாடும் ஆண்டி முர்ரே மற்றும் காயத்திலிருந்து திரும்பியுள்ள ரபேல் நடாலும் முத்திரை பதிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
மகளிர் பிரிவில் செரினா வில்லியம்ஸ், ஹாலேப், நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி, மரியா ஷரபோவா ஆகியோர் களமிறங்குகின்றனர். மிக அதிகமாக 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா இம்முறை கோப்பையை வென்றால் புதிய சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது.
0 Comments