Tamil Sanjikai

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர். இந்த கார் குண்டு தாக்குதலில் 40 கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் மசூத் அசார் தான் காரணகர்த்தா என்று பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் குற்றம் சாட்டினார். மசூத் அசாரை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான் என்று கூறிய முஷாரப், தம்மை கொல்லவும் அவன் திட்டம் தீட்டியதாக நினைவு கூர்ந்தார்.

வீரர்கள் உயிரிழப்பு குறித்து அவர் கண்டனத்தை வெளிப்படுத்திய போதிலும், இந்த தாக்குதலுக்கு இம்ரான் கான் உத்தரவிடவில்லை என பாகிஸ்தான் அரசுக்கு வக்காலத்து வாங்கி உள்ளார்.

0 Comments

Write A Comment