Tamil Sanjikai

மாமூல் வசூல் மற்றும் லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்று இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

‘தமிழகத்தில் காவல்துறையினர் பொதுஇடங்களில் மாமூல் வசூலிப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. ஏற்படுத்துகிறது. காவல்துறையினரின் செயல்பாடு இப்படி இருக்கும்போது மக்கள் எப்படி போலீசாரை மக்கள் பார்ப்பார்கள்’ எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், காவல் நிலையங்கள், பொது இடங்களில் மாமூல் வசூலிப்பதை கட்டுப்படுத்த சுற்றறிக்கை, உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

0 Comments

Write A Comment