டிக் டாக் செயலியில் இந்தியர்களின் பதிவேற்றம் செய்த 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிக் டாக் செயலி மூலம் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், அதனால் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சீன நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், விதிகளை மீறி பதிவிடப்பட்ட இந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்களை நீக்கம் செய்துள்ளதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments