Tamil Sanjikai

அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான பிங்க் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அந்த படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞராக அஜித்குமார் நடித்திருக்கும் இந்த படத்தை, தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கி இருக்கிறார்.

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தமிழில் முதன்முறையாக தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தின் டீசர் வெளியாகி இருப்பதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டுக்கு பின் போனிகபூர், வினோத் குழுவினர் அஜித்தின் 60வது படத்திலும் இணைந்துள்ளனர்.

0 Comments

Write A Comment