திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தேவர்பண்ணையில் உள்ள முல்லியாற்றின் ஓரத்தில் இன்று காலை இரு மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனை கீழே கொட்டி பார்த்த போது அதில் இருந்து ஏராளமான ஆதார் அட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை கைப்பற்றினர். ஆதார் அட்டைகளில் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் நபர்களின் முகவரிகள் உள்ளன. இதையடுத்து இவை போலி ஆதார் அட்டைகளா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0 Comments