Tamil Sanjikai

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிச் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

புனே நகரின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் அனுராக் ஹிங்கி. இவர் அப்பள்ளியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு பல மாதங்களாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக அச்சிறுவனை மிரட்டியுள்ளார்.

இருப்பினும் எப்படியோ சிறுவனின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவர அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அவர்கள், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு உறுதியாககியது. இதையடுத்து அந்த ஆசிரியர் போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்..

பள்ளி வளாகத்தில் விளையாட்டு துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறையில் வைத்து, ஆசிரியர் சிறுவனிடம் பாலியல் ரீதியாக தொல்லைகள் அளித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது

0 Comments

Write A Comment