அரசுப் பேருந்து மோதி படுகாயமடைந்த மாற்றுத்திறனாளியின் புகாரை ஏற்காமல், அவரை அலைக்கழித்த போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே, அரசுப் பேருந்து ஒன்று மோதியதில் மாற்றுத்திறனாளியான அந்தோணி என்பவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக புகார் அளிப்பதற்காக அவர் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவிடம் சென்றுள்ளார். ஆனால் அவரது புகாரை ஏற்காமல் உதவி ஆய்வாளர் மோகன் அவரை அலைக்கழித்துள்ளார். இந்த தகவல் ஊடகத்தின் கவனத்திற்கு வரவே, அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர் மோகனை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அந்தோணி மீது பஸ் மோதியது தொடர்பான புகாரில், 40 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையம் எடுக்கவில்லை என்று கூறி, எஸ்.பி. மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments