ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை அடுத்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை புல்வாமாவில் இருக்கும் பிங்லான் என்ற பகுதியில் தீவிரவாதிகள் சிலர் சுற்றிவளைக்கப்பட்டனர். அவர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே என்கவுண்டர் ஆபரேஷன் நடந்தது.
சில மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு சண்டை நடந்துவருகிறது. இதில் பொதுமக்களில் ஒருவரும் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
0 Comments