அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக கூறி, தங்கள் மீது, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க கோரி பில்ரோத் மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமையில், மொத்தமுள்ள 9 தளங்களில், அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடிகளுக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், 2006-ம் ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்டுள்ள இந்த 5 மாடிகளையும் வரைமுறைப்படுத்த அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட கோரி, பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெகநாதன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால்,இந்த மனு மீது நீதிமன்றம் முடிவெடுக்கும் முன்பே, மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக, தற்போதைய மனுவில் தெரிவித்துள்ளார்.
0 Comments