Tamil Sanjikai

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் இன்று 303 எம்.பி.,க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசயம் இந்த இம்மசோதாவுக்கு எதிராக 82 எம்.பி.,க்கள் வாக்களித்தனர். இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மூன்று முறை உடனுக்குடன் "தலாக்" எனச் சொல்லி அவர்களின் மனைவியை விவகாரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருத, முத்தலாக் தடை மசோதா வழிவகை செய்கிறது.

0 Comments

Write A Comment